Breaking News

புதுச்சேரி மாநில கழக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.

 


புதுச்சேரி மாநிலம், வில்லியனூரில் கழக நிறுவனர், பொன்மனச் செம்மல், தமிழக முன்னாள் முதலமைச்சர் பாரத ரதனா புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவசிலை 1996-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் வில்லியனூர் பகுதியில் புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்ச்சாலை விரிவாக்க பணியின் போது புரட்சித்தலைவர் திருவுருவ சிலை அகற்றப்பட்டது. 

அன்று இரவு முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் புரட்சித்தலைவர் சிலையை சாலை ஓரத்தில் நிறுவுவதற்கும், மேலும் அந்த சிலையை நிறுவுவதற்கு சில உதவிகளையும் செய்து கொடுத்துள்ளார். 

அதனடிப்படையில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய திருக்கரங்களினால் திறந்து வைக்கப்பட்ட புரட்சித்தலைவரின் திருவுருவ சிலை மீண்டும் புனரமைக்கப்பட்டு நேற்று பல நூற்றுக்கணக்கான கழகத் தொண்டர்களால் மறுபடியும் திறந்து வைக்கப்பட்டது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும். இந்த சிலை திறப்பிற்கு உதவிய மாண்புமிகு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் கழகத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொண்டர்கள் இரவு பகல் என்று பாராமல் புரட்சித்தலைவர் திருவுருவ சிலைக்கு தொடர்ந்து மரியாதை செலுத்துகின்றனர். இதனை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஒரு நபர் இன்றைக்கு பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்துள்ளார். மீண்டும் நாளை புரட்சித் தலைவரின் சிலையை அவர் திறந்து வைப்பதாகவும், அதிமுக விசுவாசியாக உள்ளவர்கள் அந்த சிலை திறப்பிற்கு வரவேண்டும் என்றும், அதிமுக வளரட்டும் என்றும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துள்ளார்.

புரட்சித்தலைவர் என்றாலே அதிமுக தான். இந்த விளம்பரம் கொடுத்தவருக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புரட்சித் தலைவரின் இந்த சிலையை நிறுவுவதற்கு இரவு பகல் என்று பாராமல் பல்வேறு நெருக்கடியான கால சூழ்நிலையிலும் இந்த புரட்சித்தலைவரின் சிலையை அமைத்து, சிலையை திறப்பதிலேயே முழுநேரம் பணி செய்தோம். புரட்சித்தலைவரின் பெயரை கூறுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை உள்ளது. கழக கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்த உங்களுக்கு உரிமையில்லை என உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதிமுகவின் தொண்டர்களை குழப்பும் வகையில் அதிமுக வளரட்டும் என்ற வாசகத்துடன் விளம்பரம் செய்துள்ளனர்.

திட்டமிட்டு மலிவு விளம்பரத்திற்காக, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இந்த மலிவு விளம்பரம் உள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், டி.ஐ.ஜி, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சந்தித்து மனு கொடுத்தும், முதலமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்து கருத்து தெரிவித்துள்ளோம். இதனை மீறி நாளை புரட்சித் தலைவர் திருவுருவ சிலையை நாங்கள் திறப்போம் என்று சென்றால் அதன் மூலம் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு காவல் துறை முழு பொறுப்பு ஏற்க வேண்டும். காவல்துறை சட்டப்படி உரிய நியாயத்தை நிலை நாட்ட வேண்டும். அப்படி இல்லை என்றால் அதிமுக தொண்டர்கள் அதனை நிலை நாட்டுவார்கள்.

அதிமுக என்ற அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போன இவர்கள் மலிவு விளம்பரத்திற்காகவும், ஒரு கலவரத்தை திட்டமிட்டு ஏற்படுத்தி அதில் ஏதாவது அரசியல் ஆதாயம் தேட முடியுமா என்ற எதிர்பார்ப்பில் இதை செய்கின்றனர். இப்படி செய்பவர்கள் உண்மையில் அதிமுக மீது பற்று கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள்.

எனவே காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில கழக இணைச்செயலாளர் ஆர் வி திருநாவுக்கரசு, மாநில கழக பொருளாளர் ரவிபாண்டுரங்கன், புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார்,மாநில துணைச் செயலாளர் நாகமணி,மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் பார்த்தசாரதி,மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன்,முன்னாள் எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவாலய இளங்கோவன்,முன்னாள் தொகுதி செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடன்ருந்தனர்.

No comments

Copying is disabled on this page!